உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஸ்ரீ விநாயகா வித்யாலயாவில் புதிய மாணவ நிர்வாகிகள்

ஸ்ரீ விநாயகா வித்யாலயாவில் புதிய மாணவ நிர்வாகிகள்

கோவை;மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் உள்ள ஸ்ரீ விநாயகா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், இன்ட்ராக்ட் கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. காரமடை ரோட்டரி சங்கத் தலைவர் சோமசுந்தரம் தலைமை வகித்தார். மாவட்ட இன்ட்ராக்ட் கிளப் திட்டத் தலைவர் ராஜலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தலைவராக சஹானா, துணைத்தலைவராக சஞ்சய் ராஜன், செயலராக தருணிகா , பொருளாளராக துாபா பதவி ஏற்றனர். ரோட்டரி சங்க உதவி ஆளுநர் வேணு சங்கர், இன்ட்ராக்ட் கிளப் சேர் சுதன், மண்டல ஒருங்கிணைப்பாளர் கோவிந்த ராஜ் ஆகியோர், பதவியேற்ற மாணவ நிர்வாகிகளை வாழ்த்தினர்.இறுதியாக, இவ்வருடத்திற்கான செயல்திட்ட இலச்சினையை, சிறப்பு விருந்தினர் வெளியிட, புதிதாக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட சஹானா பெற்றுக்கொண்டார். காரமடை ரோட்டரி சங்க செயலர் சரவணக்குமார், பொருளாளர் கங்கா, பள்ளி நிர்வாக அலுவலர் நிர்மலாதேவி, முதல்வர் சர்லின் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை