உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தட்டப்பாறை பள்ளத்தில் புதிய அருவி

தட்டப்பாறை பள்ளத்தில் புதிய அருவி

பெ.நா.பாளையம்:சின்னதடாகம் அருகே தட்டப்பாறை பள்ளத்தில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால், அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.சின்னதடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னீர்மடை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சின்னதடாகம், வீரபாண்டியொட்டிய மலைப்பகுதிகளில் ஆங்காங்கே சிறு,சிறு அருவிகள் தோன்றி வெள்ளி கம்பியை உருக்கி விட்டது போல காட்சி அளிக்கிறது.சின்னதடாகம் அருகே நஞ்சுண்டாபுரம் வருவாய் கிராமத்துக்கு உட்பட்ட தட்டப்பாறை பள்ளத்தில் மழை நீர் அருவி போலகொட்டுகிறது.இது குறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில்,'பல ஆண்டுகளுக்குப் பிறகு தட்டப்பாறை பள்ளத்தில் மழை நீர் அருவி போல கொட்டுகிறது. இது மட்டுமில்லாமல், இதே பகுதியில் உள்ள மாங்கரை அருவி, பொன்னூத்தம்மன் அருவி உள்ளிட்டவைகளிலும் மழை நீர் கொட்டுகிறது. இதனால் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி மலையோர கிராமங்களை முற்றுகையிடும் போக்கு குறையலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை