| ADDED : மே 07, 2024 10:44 PM
பொள்ளாச்சி;'பொள்ளாச்சி அருகே வடக்கிபாளையம் பிரிவில் தனியார் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்க கூடாது,' என, மா.கம்யூ., கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.பொள்ளாச்சி தாலுகா குழு மா.கம்யூ., கட்சியினர், சப் - கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி - கோவை ரோட்டில், வடக்கிப்பாளையம் பிரிவில் தனியார் மதுக்கடை அமைய உள்ளதாகவும், அதற்கான கட்டட வேலைகள் நடைபெறுவதாகவும் தெரிகிறது. பொள்ளாச்சி - கோவை ரோட்டில், அதிகமான வாகன போக்குவரத்து உள்ளது. மேலும், மதுக்கடை அமைய உள்ள இடம், குடியிருப்பு பகுதியாக உள்ளது; ஏற்கனவே அதிக விபத்துகள் நடைபெறும் இடமாக வடக்கிப்பாளையம் பிரிவு உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இந்த வழியைத்தான் பயன்படுத்துகின்றனர்.எனவே, இப்பகுதியில் மதுக்கடைக்கான கட்டடப்பணிகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுக்கடைக்கு அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.