உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை; மஸ்கட்டில் இருந்து வந்தவர் ஏமாற்றம்

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை; மஸ்கட்டில் இருந்து வந்தவர் ஏமாற்றம்

கோவை;லோக் சபா தேர்தலில் ஓட்டு போட, மஸ்கட்டில் இருந்து வந்த பெண்ணின் பெயர், வாக்காளர் பட்டியலில் இல்லாததால், ஏமாற்றம் அடைந்தார். ராம் நகர் பகுதியை சேர்ந்தவர் ரேகா. இவரின் கணவர் சுரேஷ், மஸ்கட்டில் பணிபுரிகிறார். இருவரும் மஸ்கட்டில் வசித்து வருகின்றனர். ஓட்டுப்போட, இருவரும் மஸ்கட்டில் இருந்து கோவை வந்துள்ளனர். கணவர் சுரேஷூக்கு, மேட்டுப்பாளையத்தில் ஓட்டு இருப்பதால் அவர் அங்கு சென்று வாக்கு செலுத்தினார். ரேகா, ராம் நகர் ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு மதியம், 1 மணியளவில் ஓட்டு செலுத்த சென்ற போது, அவரின் பெயர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். பட்டியலில் பெயர் இல்லாததால், ஓட்டு போட முடியாது என அவர்கள் தெரிவித்தனர்.'சேலஞ்ச் ஓட்டு' போட ஏற்பாடு செய்யுமாறு, கோரிக்கை விடுத்தனர். தேர்தல் நடத்தும் அதிகாரியான மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கும்படி, அதிகாரிகள் அறிவுறுத்தியதால் அவர் ஏமாற்றத்துடன் சென்றார். இதேபோல், இதே ஓட்டுச்சாவடிக்கு ஓட்டு போட வந்த, 63 வயதான பத்மா என்ற பெண்ணும், பட்டியலில் பெயர் இல்லாததால், மாலை 6:00 மணி வரை காத்திருந்து ஏமாற்றத்துடன் சென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ