உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயண செலவு, சாப்பாட்டுக்கு பணம் கொடுக்கல! விளையாட்டு மாணவர்களுக்கு வேதனை

பயண செலவு, சாப்பாட்டுக்கு பணம் கொடுக்கல! விளையாட்டு மாணவர்களுக்கு வேதனை

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பள்ளி கல்வித்துறை வாயிலாக, குடியரசு தினவிழா மற்றும் பாரதியார் பிறந்த தினவிழா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக, குறுமைய போட்டியைத் தொடர்ந்து, மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டி நடத்தி முடிக்கப்படவுள்ளது.குறுமைய போட்டியில் பங்கேற்க, அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இருந்தே, உடற்கல்வி ஆசிரியர் வாயிலாக ஒவ்வொரு விளையாட்டிலும் தீவிர பயிற்சியை எடுத்து வருகின்றனர்.ஆனால், போட்டியில் பங்கேற்கச் செல்லும் மாணவ, மாணவியருக்கு போக்குவரத்து செலவு மற்றும் தினப்படிக்கு, எவ்வித நிதியும் பள்ளி வாயிலாக ஒதுக்கப்படுவதில்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது:போட்டியை நடத்தும் பள்ளி நிர்வாகம், மாணவர்களுக்கான தண்ணீர் மற்றும் டீ செலவு, நடுவர்களாக செயல்படும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உணவு செலவினங்களை மட்டும் ஏற்கும்.இதனால், பள்ளியில் இருந்து போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள், போக்குவரத்துக்கு அவரவர் சொந்த செலவை ஏற்கவும், மதியம் உணவு எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறது. பள்ளியில் இருந்து போக்குவரத்து செலவு மற்றும் தினப்படி அளிக்க, அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை.இதனால், பெரும்பாலான பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், தங்களது சொந்த செலவில் மாணவர்களை போட்டிக்கு அழைத்து செல்ல வேண்டியுள்ளது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை