உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மக்களை ஏமாற்றியவர்களை ஏமாற்ற வேண்டிய தருணம் இது; வாசன் பேச்சு

மக்களை ஏமாற்றியவர்களை ஏமாற்ற வேண்டிய தருணம் இது; வாசன் பேச்சு

திருப்பூர்;''உங்களை(வாக்காளர்கள்) ஏமாற்றியவர்களை ஏமாற்ற வேண்டிய தருணம் இது,'' என்று த.மா.கா., தலைவர் வாசன் பேசினார்.திருப்பூர் பா.ஜ., வேட்பாளர் முருகானந்தத்தை ஆதரித்து, திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் வாசன் நேற்று மாலை பேசியதாவது:இத்தேர்தல் நாட்டுக்கு முக்கியமான தேர்தல். மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வர வேண்டும். அவர் இந்தியாவை ஆள வேண்டும். அந்த உயர்ந்த நிலையை எட்ட மக்கள் உதவ வேண்டும். கடந்த, 25 ஆண்டுகளாக பா.ஜ., வின் தமிழக பணிகளை மட்டுமின்றி, இந்தியாவில் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று, பா.ஜ., வின் வெற்றிக்கு உழைத்து வியூகம் வகுத்தவர் வேட்பாளர் முருகானந்தம். அண்ணாமலையும், முருகானந்தமும் இணைந்து இப்பகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய காரணகர்த்தாவாக, எதிர்காலத்தில் இருப்பர். இப்பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவர்.திருப்பூர் தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதி. நிறைய பிரச்னைகள் உள்ளன. தற்போது மக்கள் பிரதிநிதியாக இருக்கும் எம்.எல்.ஏ.,க்களும், எம்.பி., யாக இருப்பவர்களும் இதை உரிய முறையில் எதிரொலிக்கவில்லை. நல்லவர்களை அடையாளம் கண்டுகொண்டு பயன்படுத்தி கொள்ளுங்கள்.பத்து ஆண்டு கால பா.ஜ., ஆட்சியில் தீட்டப்பட்ட திட்டங்களும், சாதனைகளுமே இத்தேர்தல் வெற்றிக்கு அடித்தளம். உங்களை ஏமாற்றியவர்களை, நீங்கள் ஏமாற்ற வேண்டிய தருணம் இது. பிரதமர் மோடி தான், இதுவரை பெண்களுக்கு அதிக திட்டங்களை கொடுத்துள்ளார். திராவிட மாடல் என்று சொல்லி கொண்டு மகளிரை தி.மு.க., ஏமாற்றுகிறது. உரிமைத்தொகையில் பாகுபாடு இருக்கிறது. சிலருக்கு கொடுக்கின்றனர். பலருக்கு கொடுக்கவில்லை. பெண்களுக்கு, தி.மு.க., செய்யும் அநீதியாகும்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி