உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நர்சரி பண்ணை, மாடித்தோட்டம் டியூகாஸ் சார்பில் புதிய திட்டம்

நர்சரி பண்ணை, மாடித்தோட்டம் டியூகாஸ் சார்பில் புதிய திட்டம்

கோவை;கோவை துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில், நர்சரி பண்ணை அமைப்பது மற்றும் மாடித்தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் செடிகள், விதைகள், இடுபொருட்கள் வழங்கும் திட்டம், விரைவில் துவங்கப்பட உள்ளது.துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் (டியூகாஸ்), பொதுமக்கள் நலன் கருதி, 1,500 சதுரடியில் நர்சரி பண்ணை அமைக்கப்பட உள்ளது. அதில், தரமான நாற்றுகள், மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட உள்ளன. அடுத்தபடியாக, மாடித்தோட்டத்துக்கு தேவையான உரம், தொட்டி, வேப்பம் புண்ணாக்கு, மண்புழு உரம், காயர் பித், மாடித்தோட்டத்துக்கான மல்ச்சிங் ஷீட் ஆகியவை வழங்கப்பட உள்ளன.தோட்டக்கலைத் துறையின் அனுமதியோடு, அங்கிருந்து தரமான விதைகள் வாங்கி பொதுமக்களுக்கு விற்பனை செய்யவும், மாடித் தோட்ட பராமரிப்புக்கு ஆலோசனை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை