மேலும் செய்திகள்
ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
06-Sep-2024
கோவை:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.கோவை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் வருவாய் மாவட்டத் தலைவர் முகமது காஜா முகைதீன் தலைமை வகித்தார்.ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும், பிற ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தப்பட்டது.வருவாய் மாவட்ட செயலாளர் சாலமன்ராஜ், துணைத்தலைவர்கள் சுப்ரமணியம், சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
06-Sep-2024