உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்வி நிறுவனங்களில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்

கல்வி நிறுவனங்களில் களைகட்டிய ஓணம் கொண்டாட்டம்

ரத்தினம் கல்லுாரி

ரத்தினம் கல்விக்குழுமத்தில் கல்லுாரி மாணவர்கள் ஒன்றிணைந்து, ஓணம் திருவிழாவை கொண்டாடினர்.கேரள பாரம்பரிய உடையில் வந்திருந்த மாணவர்கள், அத்தப்பூ கோலமிட்டு ஓணத்தை வரவேற்றனர். செண்டை மேளம் மற்றும் மத்தள இசையுடனும் மாணவர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. ரத்தினம் கலை அறிவியல், தொழில்நுட்ப வளாகம், உடல் இயக்க மருத்துவ கல்லுாரி, மருந்தியல் கல்லுாரி, விஸ்டம் மேலாண்மை கல்லுாரிகளை சேர்ந்த, 7 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.ரத்தினம் கல்விக்குழுமத்தின் செயலாளர் மாணிக்கம், துணைத்தலைவர் நாகராஜ், கல்லுாரி முதல்வர் பாலசுப்பிரமணியன் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

அக்சரா அகாடமி பள்ளி

சோமையாம்பாளையம், அக்சரா அகாடமி பள்ளியில் ஓணம் பண்டிகை பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்டது.விழாவில் முதல் நிகழ்வாக மகாபலியை வரவேற்று, ஓணம் பண்டிகையின் சிறப்பு குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. தொடர்ந்து, மாணவர்களின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்கள் பல்வேறு அணியினராக பிரிக்கப்பட்டு, பூக்கோலப்போட்டிகளும் நடத்தப்பட்டது. இறுதியாக, ஓணம் பண்டிகையில் பெண்களால் ஆடப்படும் திருவாதிரைகழி நடனத்தை, பள்ளி செயலாளர், இயக்குனர், முதல்வர், ஆசிரியர்கள் இணைந்து ஆடினர்.பள்ளியின் நிர்வாகத் தலைவர் கிரீசன், செயலாளர் ஹனி, இயக்குனர் காவ்யா, பள்ளி முதல்வர் பிரமிளா மற்றும் நிர்வாகத் தலைவர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Easwar Moorthy
செப் 15, 2024 07:33

ஓணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம் ? வயநாடு பேரிடரை முன்னிட்டு கேரள அரசே ஓணத்தை தவிர்க்குமாறு உத்தரவிட்டுள்ளது. இதனால் எவ்வளவு மனித ஆற்றல் வீணடிக்க படுகிறது, எவ்வளவு பொருட் செலவு செய்யப்படுகிறது. கேரளாவில் இது போன்று தமிழ் பண்டிகைகள் கொண்டாடப்படுகிறதா அல்லது தமிழ் பண்டிகை கொண்டாட அவர்களை கேட்டுக்கொண்டால் அவர்களின் பதில் என்னவாக இருக்கும் ? வந்தாரை மட்டும் வாழவைக்கும் தமிழகம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை