உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆன்லைன் மின்கட்டண முறை மின் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

ஆன்லைன் மின்கட்டண முறை மின் ஊழியர்கள் எதிர்பார்ப்பு

பொள்ளாச்சி;'ஆன்லைன்' வாயிலாக மின்கட்டணம் செலுத்தும் முறை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.வீடு சார்ந்த மின் இணைப்புகள், இரு மாதங்களுக்கு ஒருமுறை மின்வாரிய ஊழியர்களால், கணக்கீடு செய்யப்படுகிறது. மின் அளவு கணக்கீடு செய்யப்பட்டு, பதிவாகியிருக்கும் பயன்பாட்டு அளவு, நுகர்வோர் மின் கணக்கீட்டு அட்டையில் குறிப்பிடுவதுடன், கம்ப்யூட்டரிலும் பதிவு செய்யப்படுகிறது.அதன்படி, மின் அளவு கணக்கிட்ட நாளில் இருந்து, 19 நாட்களில் மின்கட்டணம் செலுத்தும் முறை உள்ளது. பொள்ளாச்சி கோட்டத்தில், மின்வாரிய அலுவலகங்களில் 'கவுன்டர் ' அமைக்கப்பட்டு, மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.ஆனால், போதிய எண்ணிக்கையில் மின் கணக்கீட்டாளர், கணக்கீட்டு ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. தற்போது பணியில் உள்ளவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.எனவே, 'ஆன்லைன்' வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் முறை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:'டிஜிட்டல்' தொழில்நுட்பத்தை கையாளுவோர், 10 ஆயிரத்துக்கு மேல் மின் கட்டணம் செலுத்துவோர் அனைவரும், 'ஆன்லைன்' வாயிலாகவே மின் கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால், கிராமப்புறங்களில் உள்ளவர்கள், விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று மின் கட்டணம் செலுத்துகின்றனர்.சில நேரங்களில், உணவு இடைவேளை, 'கவுன்டர்' நேரம் முடியும் தருவாயில் பணம் செலுத்த முற்படும்போது, கணக்கீட்டு ஆய்வாளர் மற்றும் மின்நுகர்வோர் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.போதிய பணியாளர்களும் கிடையாது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, அனைத்து மின்நுகர்வோரும் 'ஆன்லைன்' வாயிலாக மின்கட்டணம் செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி