பீளமேட்டில் சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி புதிய கிளை திறப்பு
கோவை : சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் புதிய கிளை பீளமேட்டில் நேற்று திறந்து வைக்கப்பட்டது.சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவனமான சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமியின் புதிய கிளையை, மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், பண்ணாரி அம்மன் குழும தலைவர் பாலசுப்ரமணியம், ஜி.ஆர்.ஜி., நிறுவனங்களின் தலைவர் நந்தினி ஆகியோர் பீளமேட்டில் திறந்துவைத்தனர்.பின்னர், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேசுகையில்,''நாட்டை நிர்வகிப்பதில் முதுகெலும்பாக திகழ்வது சிவில் சர்வீஸ் பணி. பட்டதாரி மாணவர்களிடம் சிவில் சர்வீஸ் தேர்வு எழுத்தும் ஆர்வம் அதிகரித்து வருகிறது. மாணவர்களின் சிவில் சர்வீஸ் ஆசையை நிறைவேற்ற தற்காலத்தில் இதுபோன்ற பயிற்சி நிறுவனங்களின் தேவை உள்ளது,'' என்றார்.ஜி.ஆர்.ஜி., நிறுவனங்களின் தலைவர் நந்தினி பேசுகையில்,''மாணவர்களிடம் சிவில் சர்வீஸ் சார்ந்த அறிவை மேம்படுத்தி, அவர்களிடம் தன்னம்பிக்கையை இந்த பயிற்சி நிறுவனம் விதைக்கிறது.'' என்றார்.பண்ணாரி அம்மன் குழும தலைவர் பாலசுப்ரமணியம் பேசுகையில்,''அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் இந்திய ஆட்சிப்பணியில் இருப்பவர்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது,'' என்றார்.சங்கர் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிர்வாக இயக்குனர் செந்தில்நாதன், கிளை தலைவர் அருண் உட்பட பலர் பங்கேற்றனர்.