உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகள் திறப்பு; பேக் விற்பனை விறுவிறுப்பு

பள்ளிகள் திறப்பு; பேக் விற்பனை விறுவிறுப்பு

கோவை:பள்ளிகள் திறப்பை முன்னிட்டு, பேக், லஞ்ச் பேக், டிபன் பாக்ஸ் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. பள்ளிகள் திறப்பையொட்டி, பெரிய கடைவீதி மற்றும் காந்திபுரத்தில் உள்ள கடைகளில் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக், ஸ்டீல் வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ், நோட்டு புத்தகம், ரெயின் கோட், டவல், ஷு ஆகியவற்றின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.நேற்று விடுமுறை நாள் என்பதால், அனைத்துக் கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.மாணவர்கள், குழந்தைகளைக் கவரும் வகையில் பல்வேறு வண்ணங்களிலான பேக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.ஹல்க், ஸ்பைடர்மேன், பவர் ரேஞ்சர்ஸ், மெர்மைட்ஸ், யுனிகார்ன், பார்பி கேர்ள், டோரா புஜ்ஜி, சின்சான் உள்ளிட்ட கார்ட்டூன் பேக்குகள் குழந்தைகளிடையே, அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.டவுன்ஹால் பைவ் கார்னரில் உள்ள வியாபாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த சில நாட்களாக ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. இங்கு நாங்களே பேக்குகளை தைத்து விற்பனை செய்து வருவதால், குறைந்த விலைக்கு விற்க முடிகிறது. 350 ரூபாய் முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை பேக்குகள் உள்ளன. கார்ட்டூன் அச்சிடப்பட்ட பேக்குகள் குழந்தைகளின் கவனத்தை ஈர்த்துள்ளன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை