உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓவியங்கள் உணர்த்தும் மகிழ்ச்சியும், துக்கமும்!

ஓவியங்கள் உணர்த்தும் மகிழ்ச்சியும், துக்கமும்!

''ஓவியம் அழகியல் சார்ந்த கலை. அதன் வழியாக மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பார்வையால் உணர முடியும்,'' என்கிறார் ஓவியர் வரதராஜன்.கோவை காரமடை திம்மம்பாளையத்தை சேர்ந்தவர் ஓவியர் வரதராஜன். பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியங்களை வரைந்து வருகிறார்.-கோவையில் இவர் பல முறை, தனது ஓவியங்களை தனியாகவும், பிற ஓவியர்களுடன் சேர்ந்தும் கண்காட்சியாக நடத்தி இருக்கிறார்.இவரது ஓவிய கண்காட்சி, பீளமேடு கஸ்துாரி சீனிவாசன் ஓவிய அரங்கத்தில், வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கிறது.ஓவியர் வரதராஜன் கூறியதாவது:எனக்கு ஓவியங்கள் மீது சிறு வயதில் இருந்தே ஆர்வம் இருந்தது. ஆனால் முறையாக கற்றுக்கொள்ள வில்லை. பிறகு கஸ்துாரி சீனிவாசன் ஓவியர் குழுவில் இணைந்து, ஓவியங்களை முறையாக கற்றுக்கொண்டேன்.ஓவியங்களுக்கு வெளி நாடுகளில் இருக்கும் வரவேற்பு, இந்தியாவில் இல்லை. அங்குள்ள மக்கள் வீட்டு அலங்காரங்களுக்கு ஓவியங்களை தான் பயன்படுத்துகின்றனர்.அலுவலகங்கள், பொது இடங்களிலும் கூட ஓவியங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர். மரபு சார்ந்த ஓவியங்களையும், நவீன ஓவியங்களையும் வியந்து ரசிக்கின்றனர்.இந்தியாவில், முன்பு இருந்ததை விட இன்றைக்கு பரவாயில்லை. ஓவிய கண்காட்சிகளுக்கு வந்து ரசிக்கின்றனர்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, ஓவியம் கற்றுக்கொள்ள வைக்கின்றனர். ஓவியங்களுக்கு மன உணர்வுகளை மாற்றும் தன்மை உள்ளது.ஓவியம் அழகியல் சார்ந்த கலை. அதன் வழியாக மகிழ்ச்சியையும், துக்கத்தையும் பார்வையால் உணர முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை