உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒரு லட்சம் மனுக்கள் அனுப்ப பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு  தி.மு.க.,வின் வாக்குறுதியை நினைவூட்ட நடவடிக்கை

ஒரு லட்சம் மனுக்கள் அனுப்ப பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு  தி.மு.க.,வின் வாக்குறுதியை நினைவூட்ட நடவடிக்கை

கோவை: தமிழக பட்ஜெட் கூட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் செய்யும் அறிவிப்பை வெளியிட கோரி, ஒரு லட்சம் மனுக்கள் அனுப்ப, பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியிருப்பதாவது: மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் கூட்டம் நடக்க உள்ளது. இந்த நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, தமிழக முதல்வர் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.தற்போது 12 ஆயிரத்து 500 ரூபாய் தொகுப்பூதிய சம்பளத்தால், அடிப்படை தேவைகளைகூட பூர்த்தி செய்ய முடியவில்லை. எனவே 14 ஆண்டுகால தொகுப்பூதியத்தை கைவிட்டு, காலமுறை சம்பளம் வழங்க வேண்டும்.வாழ்வாதாரம், பணி பாதுகாப்பு கேட்டு பகுதிநேர ஆசிரியர்கள் கடைசி முயற்சியாக இந்த பட்ஜெட்டில் பணி நிரந்தரம் அறிவிப்பை வெளியிட வலியுறுத்தி, ஒரு லட்சம் மனுக்கள் அனுப்ப, பகுதிநேர ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.எனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையும், பள்ளிக்கல்வித்துறையும் ஒருங்கிணைந்து காலமுறை சம்பளம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.அது போல் திமுக தேர்தல் வாக்குறுதி 153ல், அரசின் அனைத்துத்துறைகளிலும் பத்து ஆண்டுக்கு மேல் தற்காலிகமாக பணிபுரிந்தால், நிரந்தரம் செய்யப்படுவார்கள் என, சொல்லப்பட்டுள்ளது. பகுதிநேர ஆசிரியர்கள், 14 ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். அந்த வகையில் பகுதிநேர ஆசிரியர்களை, பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி