உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோடு அகலப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

ரோடு அகலப்படுத்த மக்கள் வலியுறுத்தல்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் - கக்கடவு ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கிணத்துக்கடவுக்கு உட்பட்ட, செங்குட்டைபாளையம் - கக்கடவு செல்லும் ரோடு மூன்று கி.மீ., தூரம் உள்ளது. இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது.அரசு டவுன் பஸ், இந்த ரோட்டில் இயக்கப்படுகிறது. ஆனால் ரோடு மிகவும் குறுகலாக இருப்பதால், வாகனங்கள் ரோட்டில் சென்று வர சிரமமாக உள்ளது.விவசாயிகள் டிராக்டரில் செல்லும் போதும், பஸ் செல்லும் போதும், எதிர் திசையில் வரும் பைக் ஒதுங்கி நின்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ரோட்டை அகலப்படுத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி