உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்க்க மக்கள் வலியுறுத்தல்

ஆதரவற்றோரை காப்பகத்தில் சேர்க்க மக்கள் வலியுறுத்தல்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், சுற்றித் திரியும் ஆதரவற்றவர்களைக் கண்டறிந்து, அவர்களை காப்பகத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி நகரில், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில், ஆதரவற்றவர்கள் சுற்றி வருகின்றனர். அவர்கள் யார் என்றும், எந்த ஊர் என்றும் தெரியாத நிலை உள்ளது.அவர்களில் பலர், ரோட்டோரம் மட்டுமின்றி ரயில்வே ஸ்டேஷன், மருத்துவமனை வளாகம் பகுதிகளில் படுத்து உறங்குகின்றனர். சிலர், பசியோடு வலம் வருகின்றனர்.ஆதரவின்றி நகரில் சுற்றி வருவோரைக் கண்டறிந்து, ஏதேனும் ஒரு காப்பகத்திற்கு அழைத்துச் சென்று பராமரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'தற்போதைய சூழலில் மழையிலும், குளிரிலும் வாடும் இவர்களுக்கு, யார் பாதுகாப்பு கொடுப்பர் என்பது கேள்வியாக உள்ளது. ஆதரவின்றி சுற்றித் திரிவோரை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வயதான பெண்கள், கிழிந்த ஆடையுடன் இருப்பதை காணும் பலரும், அவர்களுக்கு உதவ முன்வருவதும் கிடையாது. முதியவர்களை விட்டுச் செல்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை