உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல அனுமதி

பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல அனுமதி

உடுமலை:உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டதால், உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிக சுற்றுலா மையமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த வாரம் முழுதும் பெய்த கனமழையால், பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலையும், அவ்வப்போது காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. மழை குறைந்ததும், கோவிலுக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.ஆனால், கனமழை காரணாக, ஒரு வாரமாக மலை மேலுள்ள பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல, சுற்றுலா பயணியருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று காலை, மலைப்பகுதிகளில் மழை பொழிவு இல்லாததால், பஞ்சலிங்கம் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். ஆர்ப்பரித்து கொட்டிய அருவியில், பொதுமக்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். வனத்துறையினர், கோவில் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர். 'மழை பெய்தால், உடனடியாக சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ