உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்வாயை துார்வார வலியுறுத்தல் நடவடிக்கை கோரி மனு

கால்வாயை துார்வார வலியுறுத்தல் நடவடிக்கை கோரி மனு

பொள்ளாச்சி,; 'பொள்ளாச்சி சின்னாம்பாளையத்தில், சாக்கடை கால்வாயை துார்வார வேண்டும்,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், சப் - கலெக்டர் (பொ) விஸ்வநாதன் தலைமையில் குறைதீர் நாள் முகாம் நேற்று நடந்தது.பா.ஜ., தெற்கு ஒன்றிய தலைவர் கவுதம் லிங்கராஜ் மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:பொள்ளாச்சி, சின்னாம்பாளையத்தில் இருந்து டி.கோட்டாம்பட்டி செல்லும் ரோட்டில் சாக்கடை கால்வாயில் குப்பை குவிந்து கழிவுநீர் தேங்கியுள்ளதால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளதுடன், ஈக்கள், விஷ பூச்சிகளும் உற்பத்தியாகின்றன.இதனால், பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு சிரமப்படுகின்றனர்.இந்த சாக்கடையை கடந்து தான் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தினமும் செல்கின்றனர். சாக்கடை கால்வாயின் குறுக்கே கட்டப்பட்ட தரைவழிபாலத்தின் இருபுறமும் தடுப்புச்சுவர் இல்லாமல், தற்காலிக சிறு கம்பிகள் பொறுத்தப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது.எனவே, சாக்கடை கால்வாயை துார்வாரவும், பாலத்தின் இருபுறமும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.* சரளப்பதி பழங்குடியினத்தை சேர்ந்தவர் கொடுத்த மனுவில், 'சரளப்பதியில் தனிநபர் ஒருவரிடம் பணம் வாங்கியதற்காக, அங்கேயே கூலி வேலை செய்து வருகிறோம். கூலியும் உயர்த்தி தருவதில்லை. அதிகமான கடன் தொகையை செலுத்த வேண்டும் என மிரட்டுகிறார். போலீசார் துணையுடன் தற்போது மிரட்ட துவங்கியுள்ளார்.எனவே, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து கொத்தடிமை தொழிலில் இருந்து என்னையும், குடும்பத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை