உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூராட்சி தலைவர் பதவியை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்க மனு

பேரூராட்சி தலைவர் பதவியை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்க மனு

அன்னுார்:அன்னுார் பேரூராட்சி தலைவர் பதவியை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய பல்வேறு அமைப்புகள் கலெக்டரிடம் மனு அளித்தன. அன்னுார் சிறப்பு நிலை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 30 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். நேற்று கோவை கலெக்டர் அலுவலகத்தில், நல்லி செட்டிபாளையம் இளைஞர் மன்றம், ஆதித்தமிழர் பேரவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ் புலிகள் கட்சி ஆகியவை இணைந்து கொடுத்த மனுவில், 'அன்னுார் சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் பதவி 30 ஆண்டுகள் பொதுவாகவும், 10 ஆண்டுகள் பெண்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பேரூராட்சி உருவானது முதல் இதுவரை ஒரு முறை கூட ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படவில்லை. பேரூராட்சி பகுதியில், 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கின்றனர். எனவே, வருகிற தேர்தலில் அன்னுார் பேரூராட்சி தலைவர் பதவியை ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்,' என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ