உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய கூலியை உயர்த்த மனு கொடுத்து வலியுறுத்தல்

விவசாய கூலியை உயர்த்த மனு கொடுத்து வலியுறுத்தல்

பொள்ளாச்சி;'விவசாய கூலியை உயர்த்தி வழங்க வேண்டும்,' என கோட்டூர் பேரூராட்சி பகுதி மக்கள், சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடந்த, குறைதீர் நாள் கூட்டத்தில், கோட்டூர் பேரூராட்சி பகுதி மக்கள் மனு கொடுத்தனர்.அதில், கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய தோட்டத்துக்கு தினக்கூலி வேலைக்கு, 600 பேர் சென்று வருகிறோம். தினக்கூலியாக, 250 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைக்கு தினக்கூலியாக, 319 ரூபாய் என ஊராட்சிகளில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.விலை வாசி உயர்வு, அத்தியாவசிய தேவைகள் உள்ளதால், விவசாய கூலிக்கு, 300 ரூபாய் வழங்க வேண்டும்.மேலும், ஆழியாறு ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளதால், வேலைக்கு போகும் பெண்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மதுக்கடையை இடமாற்றம் செய்ய வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ