உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளஸ் 1 கணினி அறிவியல் எளிது; மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் 1 கணினி அறிவியல் எளிது; மாணவர்கள் மகிழ்ச்சி

அன்னுார் : 'பிளஸ் 1 கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடு தேர்வு மிக எளிதாக இருந்தது,' என, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். பிளஸ் 1 தேர்வு கணினி அறிவியல் தேர்வும், தொழில் கல்வி மாணவர்களுக்கு கணினி பயன்பாடு தேர்வும் நேற்று நடந்தது.

கணினி பயன்பாடு எளிது

லக்சனா, அன்னுார். கணினி பயன்பாடு தேர்வு மிக எளிதாக இருந்தது. அனைத்து கேள்விகளும் படித்த பாடங்களில் இருந்தே வந்திருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும். எளிதில் தேர்ச்சி பெற முடியும்.

நல்ல மதிப்பெண் பெற முடியும்

கவுசிக், அன்னுார். மாதிரி கேள்வித்தாள் மற்றும் ஆசிரியர்கள் தெரிவித்த பெரும்பாலான கேள்விகள் தேர்வில் வந்திருந்தது. மிக எளிதாக இருந்தது. நல்ல மதிப்பெண் பெற முடியும்.

கணினி அறிவியல் எளிது

அஸ்வின், மசாண்டிபாளையம். கணினி அறிவியல் பாடத்தில், 70 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பல கேள்விகள் மிக எளிதாக இருந்தன. அதிக மதிப்பெண் பெற முடியும்.ஒரு மதிப்பெண் கேள்விகளில் 11வது கேள்வி மட்டும் பாடத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்தது.

மூன்று மதிப்பெண் கேள்வி கடினம்

கிருஷ்ண பிரசாந்த், கெம்பநாயக்கன்பாளையம். ஒரு மதிப்பெண் கேள்விகள் மிகவும் எளிதாக இருந்தன. தேர்ச்சி பெறுவது எளிது.மூன்று மதிப்பெண் கேள்விகள் மட்டும் கடினமாக இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை