உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளஸ் 2 தமிழ் பாடத் தேர்வு ஈசி; மாணவர்கள் உற்சாகம்

பிளஸ் 2 தமிழ் பாடத் தேர்வு ஈசி; மாணவர்கள் உற்சாகம்

-- நிருபர் குழு -பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கிய நிலையில், நேற்று நடந்த தமிழ் பாடத் தேர்வை, 7,864 பேர் எழுதினர்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, 38 மையங்களில் நடத்தப்படுகிறது. அவ்வகையில், நேற்று, பிளஸ் 2 மாணவர்களுக்கான, தமிழ் பாடத் தேர்வு நடந்தது.அதில், 3,624 மாணவர்கள், 4,240 மாணவியர் என, 7,864 பேர் தேர்வு எழுதினர். 144 மாணவர்கள், 41 மாணவியர் என, 185 பேர் 'ஆப்சென்ட்' ஆகி இருந்தனர். தனித்தேர்வர்களை பொறுத்தமட்டில், 13 மாணவர்கள், 14 மாணவியர் என, 27 பேர் தேர்வு எழுதினர்.

வால்பாறை

வால்பாறை தாலுகாவில் மொத்தம், 7 பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். அட்டகட்டி, சோலையாறுடேம், வால்பாறை, துாய இருதய மேல்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது.நேற்று, தமிழ்த்தேர்வு எழுத, 396 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 11 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில், 385 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

உடுமலை

உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு, 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று தமிழ் மொழிப்பாடத்தேர்வு துவங்கியது.காலை, 8:30 மணிக்குள் போலீஸ் பாதுகாப்புடன் ஐந்து வழிதடங்களில் அந்தந்த மையங்களுக்கு வினாத்தாள்கள் கொண்டு செல்லப்பட்டன. மாணவர்கள், 10:15 மணிக்கு தேர்வு எழுத துவங்கினர். கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினர்.தேர்வு குறித்து கணபதிபாளையம் கந்தசாமிமெட்ரிக் பள்ளி மாணவர்கள் கருத்துவருமாறு:கவின்தீபக்: முழுமையாக பயிற்சி செய்திருந்ததால், தமிழ்த் தேர்வை எளிதாக எதிர்கொண்டேன். ஒரு மதிப்பெண் வினாக்கள் அனைத்துக்கும் பதிலளித்துள்ளேன். அதில், 8 புறவினாவும், 5 அகவினாவும், ஒரு மாற்று வினாவும் இருந்தது. இரண்டு மதிப்பெண் வினாக்களில், மூன்றில் இரண்டு புற வினாவும், ஒரு அக வினாவும் இருந்தது. நான்கு, ஆறு மதிப்பெண் வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தது. அதனால், 10 நிமிடத்திற்கு முன்னதாகவே தேர்வு எழுதி முடித்தேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.சுரேகா: தமிழ் பாடத்தை முறையாக படித்து, தீவிர பயிற்சி எடுத்திருந்தேன். அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. மனப்பாட பாடல், திருக்குறள் ஆகியவற்றை எழுத்துப் பிழையின்றி எழுதினேன். அதனால், 20 நிமிடத்திற்கு முன்னதாகவே, அனைத்து வினாக்களுக்கும் பதில் எழுதி முடித்து விட்டேன். முழு மதிப்பெண் கிடைக்கும்.ஸ்ரீநிதி: தமிழ் பாடத்தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. நன்கு படித்து எழுத்து பயிற்சி செய்திருந்ததால், அக வினாக்களுக்கு சுலபமாக பதில் எழுதினேன். நல்ல மதிப்பெண் கிடைக்கும் என, நம்புகிறேன்.வால்பாறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேட்டி வருமாறு:பாவனா: தமிழ் மொழி தேர்வு மிக எளிதாக இருந்தது. ஆசிரியர் கற்பித்து, பயிற்சியளித்த பகுதிகளில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. நன்கு பயிற்சி செய்திருந்ததால், தேர்வை அச்சமின்றி எழுதினேன். அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.மதனிகா: தேர்வு மையத்திற்குள் செல்லும் போது, மனதில் படபடப்பு இருந்தது. ஆனால் வினாத்தாளை பெற்றவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.ஒரு மதிப்பெண்களுக்கான கேள்வி மட்டும் கஷ்டமாக இருந்தது. படித்த பாடத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டதால், தேர்வை விரைவாகவும், தெளிவாகவும் எழுதினேன்.செண்பகம்:தமிழ் தேர்வை பொறுத்த வரை படித்த பாடங்களில் இருந்து தான் பெரும்பாலான கேள்விகள் கேட்டபட்டன. சில கேள்விகளை தவிர, அனைத்தும் ஈசியாக இருந்தது. அதிக மதிப்பெண் கிடைக்கும். இதே போன்று பிற தேர்வுகளும் இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.உடுமலை ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கருத்து:ஜெயசுதா: தமிழ் தேர்வு எளிமையாக இருந்தது. ஆனால், ஒரு மதிப்பெண் வினாக்கள் நேரடியாக இல்லாமல் பாடத்தின் உள்ளே இருந்து கேட்கப்பட்டிருந்தது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளிலிருந்து அதிகமான வினாக்கள் வந்ததால், விரைவில் விடைகளை எழுத முடிந்தது.வர்ஷினி: பொதுத்தேர்வில் முதல் தேர்வு எளிமையாகவும், எதிர்பார்த்த வகையிலும் வந்ததால், மற்ற தேர்வுகளை எதிர்கொள்ள தைரியமாக உள்ளது. தமிழ் பாடத்தேர்வில் அனைத்து பிரிவுகளிலும், வினாக்கள் அதிகம் பயிற்சி பெற்றவையாக கேட்கப்பட்டிருந்தன. பள்ளியில் திருப்புதல் தேர்வு அதிகம் நடந்ததால், பாடங்களை புரிந்துகொண்டு படிப்பதற்கும் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி பொதுத்தேர்வுக்கு கைகொடுத்தது.சுவேதா: தேர்வில் வினாக்கள் எதிர்பார்த்தபடியும், பயிற்சி செய்தவையாகவும் இருந்தன. இதனால், விடை எழுதுவதற்கு சுலபமாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் நான்கு வினாக்கள் புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்பட்டிருந்தன. பாடங்களை முழுமையாக படித்திருந்தால் விடை எழுதிவிடலாம். சதம் பெறுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளது.நிவேதா: ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண் பிரிவுகளில் சிறிது குழப்பும் வகையில் வினாக்கள் இருந்தன. ஆனால், நிதானமாக எழுதினால் எளிமையாக விடையளிக்கும் வகையில் இருந்தன. மொழி பெயர்ப்பு பகுதி வருமென எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கு மாற்றாக வேறு வினா கேட்கப்பட்டிருந்தது. மற்ற பகுதிகள் சுலபமாகதான் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை