- நிருபர் குழு -பொள்ளாச்சி மற்றும் உடுமலை சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதில், நந்திக்கும், சிவ பெருமானுக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன. அதுபோன்று, யோக நரசிம்மருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். உடுமலை
உடுமலை, தில்லை நகர் ரத்னலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிகளுக்கு,பால், பன்னீர் உட்பட 16 வகையான திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது.நந்தி சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடு நடந்தது. உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில், காசி விஸ்வநாதர் சுவாமிகளுக்கும், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வர் கோவில், ருத்ரப்ப நகர் பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவில், மடத்துக்குளம், கொழுமம், தாண்டேஸ்வரர் கோவில், கடத்துார் அர்ச்சுணேஸ்வரர் கோவில்களில் சிறப்பு அபிேஷகத்துடன் அலங்கார பூஜை நடந்தது. பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வழிபட்டு சென்றனர்.* கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.