உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை சிறையில் கைதி தற்கொலை

கோவை சிறையில் கைதி தற்கொலை

கோவை; கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோவை மத்திய சிறையில் 2500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார், 35 குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 5 மணியளவில் சரவணகுமார் தனது பேன்ட் நாடாவை பயன்படுத்தி சிறையில் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த சிறை அதிகாரிகள் அவரை மீட்டு, சிறை மருத்துவமனையில் முதலுதவி அளித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து கோவை அரசு மருத்துவமனைக்கு சிறை ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து, சிறை வார்டன் சரவணகுமாார் அளித்த புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை