அரசு மேல்நிலைப்பள்ளியில் நெய்தல் அணிக்கு பரிசு
வால்பாறை, ; மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், சிறப்பாக செயல்பட்ட நெய்தல் அணிக்கு சுழற்கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தலின் படி மாணவர்கள் நலனுக்காகவும், தலைமை பண்பை வளர்க்கும் வகையிலும், 'மகிழ் முற்றம்' எனும் மாணவர் அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த கல்வியாண்டில் 'மகிழ்முற்றம்' நெய்தல் அணிக்கு பள்ளி இணை செயல்பாடுகளில் சிறந்து விளங்கியமைக்கு சுழற்கோப்பையும், மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கலந்து கொண்டு தேர்வு செய்யப்பட்ட நெய்தல் அணியை சேர்ந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டி பேசினார்.