உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனப்பகுதியில் நடவு செய்ய 7,500 நாற்றுகள் உற்பத்தி

வனப்பகுதியில் நடவு செய்ய 7,500 நாற்றுகள் உற்பத்தி

மேட்டுப்பாளையம்:சிறுமுகை வனப்பகுதியில், நடவு செய்ய, 7,500 நாற்றுகள், உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.சிறுமுகை வனச்சரகம், 11,684 ஹெக்டர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. மழைக்காலத்தில் வனப்பகுதிகளில் நடவு செய்ய, நாற்றுகள் வளர்க்கும் பணிகளில், வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.கோத்தகிரி ரோட்டில் வனத்துறை டெப்போ அருகே, நாற்றுகள் வளர்க்கும் நாற்றங்கால் உள்ளது. இங்கு வனப்பகுதியில் நடுவதற்கும், விவசாயிகளுக்கு வழங்கவும், பல்வேறு வகையான நாற்றுகளை, வனத்துறையினர் உற்பத்தி செய்து வருகின்றனர்.இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ் கூறியதாவது:உசில், மூங்கில், இலந்தை, கொடுக்காப்புளி, தேக்கு, மகாகனி, மலைவேம்பு, சவுக்கு என பல்வேறு வகையான, 10 ஆயிரம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. நன்கு வளர்ந்த பின்,இதில் 7,500 நாற்றுகள் வனப்பகுதியில் நடவு செய்யப்படும். விவசாயிகளுக்கு 2,500 நாற்றுகள் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு வனச்சரக அலுவலர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ