| ADDED : ஏப் 29, 2024 12:45 AM
கோவை;மின்னணு வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள, கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், டிரோன் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோவை லோக்சபா தொகுதிக்கான தேர்தலில், ஓட்டுபதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லுாரியில்(ஜி.சி.டி.,), பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.மின்னணு எந்திரங்களை பாதுகாக்கும் பொருட்டு நேற்று காலை, 6:00 மணி முதல் மே 2ம் தேதி காலை, 6:00 மணி வரை, அரசு தொழில்நுட்பக் கல்லுாரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடகோவை, ஆர்.எஸ்.புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி.என்.புதுார் மற்றும் இப்பகுதிகளின் சுற்றுவட்டாரங்கள், தற்காலிக 'ரெட் அலர்ட்' பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, குறிப்பிட்டுள்ள பகுதிகளில் டிரோன்களை இயக்க, பறக்க விட தடை செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.