உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.எஸ்.ஜி., மினி மராத்தான் போட்டி; முதல் 15 வெற்றியாளர்களுக்கு  பரிசு

பி.எஸ்.ஜி., மினி மராத்தான் போட்டி; முதல் 15 வெற்றியாளர்களுக்கு  பரிசு

கோவை; பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்த, மினி மராத்தான் போட்டியில் மாணவ, மாணவியர், 950 பேர் பங்கேற்றனர்.பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில், 'மினி மராத்தான்-2025' போட்டி நடந்தது. 'போதையை தவிர்த்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்' என்பதை கருப்பொருளாக கொண்டு நடத்தப்பட்ட மராத்தான் போட்டியானது, கல்லுாரி மைதானத்தில் துவங்கி, பீளமேடு வழியாக சவுரிபாளையம் கடந்து மீண்டும் கல்லுாரி வந்தடைந்தது.கல்லுாரி மாணவர்கள், 521 பேர், மாணவியர், 431 பேர், பணியாளர்கள், 26 பேர், முன்னாள் மாணவர்கள், 11 பேர் உட்பட, 950க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர். கல்லுாரி மாணவர்களுக்கு, 7.5 கி.மீ., துாரத்துக்கும், மாணவியருக்கு, 5 கி.மீ., துாரத்துக்கும் மராத்தான் நடந்தது.மாணவர் பிரிவில், மெக்கானிக்கல் இன்ஜி., இரண்டாமாண்டு மாணவர் தர்னீஷ் முதலிடத்தையும், மாணவியர் பிரிவில் பயோடெக்னாலஜி முதலாமாண்டு மாணவி கீர்த்தனா, முதல் பரிசையும் தட்டினர். தவிர, இரு பிரிவிலும் முதல், 15 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ