உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கொங்குநாடு நர்சிங் கல்லுாரி சார்பில் மனநல கருத்தரங்கு

கொங்குநாடு நர்சிங் கல்லுாரி சார்பில் மனநல கருத்தரங்கு

கோவை:கொங்குநாடு நர்சிங் கல்லுாரியின் சார்பில், மனநல ஆரோக்கிய பற்றிய சிறப்பு கருத்தரங்கம், தீனம்பாளையத்தில் உள்ள கொங்குநாடு நர்சிங் கல்லுாரியில் நடந்தது. கொங்குநாடு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ராஜு, மருத்துவ இயக்குனர் டாக்டர் கார்த்திகேயன், கல்லுாரியின் நிர்வாக அறங்காவலர் ஆர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.கோவை, நாமக்கல், மதுரை மாவட்டங்களை சேர்ந்த நர்சிங் கல்லுாரிகளிலிருந்து, ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மருத்துவர்கள் சிறப்புரையாற்றினர். போஸ்டர், பேப்பர் பிரசன்டேஷனில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கொங்குநாடு நர்சிங் கல்லுாரியின் முதல்வர் டாக்டர் ஜோஸ்பின் ஜாக்லின், துணை முதல்வர் நாகமாலா, நிர்வாக அலுவலர் டாக்டர் நாசர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை