உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.ஜே.கே., கல்லுாரியில் பஞ்சாபி உணவுத்திருவிழா

ஏ.ஜே.கே., கல்லுாரியில் பஞ்சாபி உணவுத்திருவிழா

கோவை:நவக்கரை ஏ.ஜே.கே., கலை அறிவியல் கல்லுாரியின் உணவளிப்பு அறிவியல் மற்றும் உணவக மேலாண்மைத்துறை சார்பில், 'ஓயே பஞ்சாபி உணவுத்திருவிழா' என்ற பெயரில், நாளை மாலை 6:30 மணி முதல், உணவுத்திருவிழா நடைபெறவுள்ளது.இதில் பஞ்சாப் மாநிலத்தில் விளையும் பொருட்கள் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் உள்ளிட்டவை மையமாக கொண்டு, பல்வேறு உணவுகள் தயார் செய்யப்படுகின்றன.உருளைகிழங்கு நந்துாரி, சேனைக்கிழங்கு கபாப், வறுத்த சிக்கன், அங்கார சிக்கன், பட்டியாலா தவா மீன் உள்ளிட்ட 'ஸ்டார்டர்ஸ்' வகைகளும், சட்னி வகைகள், குழம்பு வகைகள், பருப்பு வகைகள், பாலக் சிக்கன் கிரேவி, ரொட்டி வகைகள், இனிப்பு வகைகள் என, 100க்கும் மேற்பட்ட பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.உணவுத்திருவிழாவில், பஞ்சாப் மாநிலத்தின் பாரம்பரிய ஆடை அலங்கார அணிவகுப்பு, நடனம், இசை உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.பங்கேற்கும் பொது மக்கள் அனுமதி சீட்டு பெற, 90470 44304 என்ற எண்ணில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ