உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானாவாரி மேம்பாட்டு திட்டம்:  வேளாண் அதிகாரிகள் தகவல் 

மானாவாரி மேம்பாட்டு திட்டம்:  வேளாண் அதிகாரிகள் தகவல் 

ஆனைமலை:ஆனைமலை பகுதியில், மானாவாரி மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனைமலை வேளாண் உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை வருமாறு:ஆனைமலை வட்டாரத்தில், 2024- 25ம் ஆண்டில் மானாவாரி பகுதி மேம்பாட்டு இயக்கத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித்திட்ட கிராம விவசாயிகளை உள்ளடக்கி, 60 ெஹக்டேரில், மூன்று தொகுப்பாக இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இத்திட்டத்தில், சோளம், கம்பு, நிலக்கடலை, எள் போன்ற, மானாவாரி பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள், பண்ணை சார்ந்த தொழில்களான ஆடு, கறவை மாடு, கோழி வளர்ப்பு, பழ மர கன்றுகள் வளர்த்து பராமரித்தல், தேனி வளர்ப்பு மற்றும் மீன்வளர்ப்பில் ஈடுபட ஒரு ெஹக்டேருக்கு, 30 ஆயிரம் ரூபாய் மானிய உதவி அரசால் வழங்கப்படும்.பங்கேற்க விருப்பமுள்ள விவசாயிகள், கோட்டூர் மற்றும் ஆனைமலை வேளாண் அலுவலகங்களை அணுகி, உதவி அலுவலர்களிடம் தேவையான சிட்டா, வங்கி கணக்கு எண், கால்நடை காப்பீடு ரசீது போன்ற ஆவணங்களை சமர்ப்பித்து, 'உழவன் செயலி' ஆப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ