உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொண்டாமுத்துாரில் மழை: மக்கள் மகிழ்ச்சி

தொண்டாமுத்துாரில் மழை: மக்கள் மகிழ்ச்சி

தொண்டாமுத்துார்;தொண்டாமுத்துார் வட்டாரத்தில், 4 மாதங்களுக்குப்பின், மழை பெய்ததால், பொதுமக்கள் ஆனந்தமடைந்தனர்.கோவையின் மேற்கு புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர் வட்டாரப்பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த இப்பகுதியில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. குறிப்பாக, கடந்த 10 நாட்களாக, நாள்தோறும் 103 டிகிரிக்கு குறையாமல் வெயிலால் கொதித்தது. இந்நிலையில், நேற்று மாலை, 4:20 மணிக்கு, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது. சுமார், 20 நிமிடங்கள் மட்டுமே மழை பெய்தாலும், சாலைகளில் மழைநீர் ஓடியது. நேற்று மாலை தொண்டாமுத்துார் வட்டாரப்பகுதி முழுவதும் குளிர்ந்ததால், பொதுமக்கள் ஆனந்தமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை