உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரமலான் நோன்பு நாளை துவக்கம்

ரமலான் நோன்பு நாளை துவக்கம்

கோவை; கோவையில் பிறை தென்படாததால், ரமலான் நோன்பு நாளை துவங்கும் என, கோயம்புத்தூர் அத்தர் ஜமா அத் தலைவர் அமானுல்லா கூறினார்.இஸ்லாமியர்களின் முக்கிய திருநாளான ரமலான் இம்மாதம், 30ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, நோன்பு துவக்குவதற்கான ரமலான் பிறை பார்க்கும் நிகழ்ச்சி, நேற்று ஒப்பணக்கார வீதியிலுள்ள கோயம்புத்தூர் அத்தர் ஜமா அத்தில், தலைவர் அமானுல்லா தலைமையில் நடந்தது.தலைவர் அமானுல்லா கூறுகையில், ரமலான் பிறை பார்க்கும் கூட்டத்தில், மகா சபையினர், ஜமா அத்தார், தலைமை இமாம் முஹமது இப்ராஹிம் பாகவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநிலத்தில் எங்கும் பிறை தென்பட்டதாக தகவல் இல்லை. இனிமேலும் பிறை தென்பட்டதாக தகவல் வந்தாலும், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. எனவே ரமலான் நோன்பு 2ம் தேதி முதல் அனுசரிக்கப்படும்,'' என்றார்.ஜமா அத் கமிட்டியின் பொருளாளர் பக்கீர் முஹமது, காஜா உசேன், முஹமது யூசூப், முஹமது சபீக், ஹாஜிக்கள் முஹமது இப்ராஹிம், நவுஷாத் அலி, நிஜாமுதீன், முஹமது ஷாஜஹான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை