உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேராசிரியர்களுக்கான விளையாட்டு  ராமகிருஷ்ணா மிஷன் சாம்பியன் 

பேராசிரியர்களுக்கான விளையாட்டு  ராமகிருஷ்ணா மிஷன் சாம்பியன் 

கோவை:ரத்தினம் கல்லுாரியில் நடந்த பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டி ஆண்கள் பிரிவில், ராமகிருஷ்ணா மிஷன் கல்லுாரி அணி, சாம்பியன் கோப்பையை வென்றது. ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி சார்பில், 'குருஷேத்ரா 2024' என்ற பெயரில், பேராசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ஈச்சனாரியில் உள்ள அக்கல்லுாரி வளாகத்தில் நடந்தன. ரத்தினம் கல்வி குழும தலைவர் மதன் செந்தில், செயலாளர் மாணிக்கம், முதல்வர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்ட இப்போட்டியில், 38 கல்லுாரிகளை சேர்ந்த 437 பேர் பங்கேற்றனர். பேராசிரியர்களுக்கு வாலிபால், கூடைப்பந்து, இறகுப்பந்து, செஸ், கேரம், கிரிக்கெட், த்ரோபால் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, ராமகிருஷ்ணா மிஷன் கல்லுாரி அணி ஆண்கள் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றது. பெண்கள் பிரிவில், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற பேராசிரியர்களுக்கு, கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை, கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் ஜாய்சி, ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி