| ADDED : ஜூன் 09, 2024 11:56 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி ஜோதிநகர் படிகள் படிப்பகத்தில், 24வது நிகழ்வு நடந்தது. படிகள் படிப்பக நிறுவனர் கவிஞர் ஜெயக்குமார் வரவேற்றார்.பொள்ளாச்சி மாகாளி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ரவிக்குமார் மயில்சாமி மற்றும் கோலார்பட்டி சின்னச்சாமி முன்னிலை வகித்தனர்.மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர் செல்வகுமார் பேசுகையில், ''வாசிப்பு என்பது மிக முக்கியம் ஏழ்மை நிலையில் இருந்து உயர்நிலைக்கு வருவதற்கு சரியான வழி வாசிப்பு தான்,'' என்றார்.பொள்ளாச்சி இலக்கிய வட்ட தலைவர் அம்சப்ரியா பேசியதாவது:நான் இந்த நிலைக்கு வந்ததற்கு, அடிப்படை காரணம் வாசிப்பு தான். நான் வாசித்ததால் தான் இன்று என்னுடைய கவிதை பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திட்டத்தில் இருக்கிறது.அதுபோல ஒரே வேளையில் ஏழு புத்தகங்கள் வெளியிடுகிறேன் என்றால், அதற்கு அடிப்படை வாசிப்பு தான். எனது சமூக பார்வைக்கும் வாசிப்பு முக்கியமாக உள்ளது.ஆகவே வாசிப்பை ஒவ்வொருவரும், அதுவும் குழந்தை செல்வமாகிய நீங்கள் புரிந்து வாசிக்க வேண்டும். படிகள் படிப்பகத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார். மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களுடன் வாய்ப்பாடு புத்தகம் வழங்கப்பட்டது.