உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செங்காந்தள் விதை மூட்டை குடோனில் அபேஸ்

செங்காந்தள் விதை மூட்டை குடோனில் அபேஸ்

கோவை, : செங்காந்தள் மலர் விதை மூட்டை திருட்டுபோனது தொடர்பாக, சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.நவ இந்தியா அருகே உடையாம்பாளையத்தை சேர்ந்தவர் தியாகராஜன்,52. இவர் அதே பகுதியில் கடந்த, 10 ஆண்டுகளாக நடத்திவரும் மூலிகைகள் சார்ந்த நிறுவனத்தில், செங்காந்தள் மலர் விதைகள் விற்பனை செய்துவருகிறார். நிறுவனத்துக்கான குடோன் இருகூர் பகுதியில் அமைந்துள்ளது. கடந்த ஜூன், 13ம் தேதி தியாகராஜன் விதை இருப்பை கணக்கிட்டபோது தலா, 50 கிலோ கொண்ட, 136 மூட்டைகள் இருந்துள்ளன. மறுநாள் குடோன் மேலாளர் பார்த்திபன் விதை இருப்பை சோதனையிட்டபோது ஒரு மூட்டை காணவில்லை.இதுதொடர்பாக, நேற்று முன்தினம் சிங்காநல்லுார் போலீசில் தியாகராஜன் புகார் அளிக்க விசாரணை நடந்துவருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை