| ADDED : ஆக 03, 2024 05:46 AM
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, தேவராயபுரம் மக்கள் தாசில்தாரிடம் மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது: தேவராயபுரத்தில், 500 சதுர மீட்டர் பரப்பளவில், மதுரை வீரன், மாரியம்மன் மற்றும் முருகர் கோவில் அமைந்துள்ளது.இப்பகுதி மக்கள் அனைவரும், பல ஆண்டுகளாக கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர். வீட்டு சுப நிகழ்ச்சிகளும் கோவில்களில் நடத்தி வருகின்றனர். தற்போது, மதுரை வீரன் கோவில் திருப்பணி நடக்கிறது.கோவில் ஆண்டு விழாவின் போது, கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிகமாக கொட்டகை, யாக சாலைகள் அமைப்பதற்கும் கோவிலை சுற்றி இடம் காலியாக உள்ளது.இந்நிலையில், தேவராயபுரத்தை சேர்ந்த சிலர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, பசுமை வீடு திட்டத்தின் கீழ் கட்டடங்கள் கட்ட முயற்சித்து வருகின்றனர். கோவில் நிலத்தை அபகரிக்க முயற்சி நடக்கிறது. இது குறித்து, பலமுறை தெளிவுபடுத்தியும் சிலர் கேட்காததால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.