மேலும் செய்திகள்
வாகன விபத்தில் ஒருவர் காயம்
17-Aug-2024
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியின் சுவர் சேதமடைந்துள்ளது.கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில், 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் கடந்த ஆண்டு கட்டடம் இடிக்கப்பட்டது. அப்போது பள்ளி நுழைவு வாயிலில் கேட் அருகே உள்ள சுவர் சேதமடைந்தது.இந்த சுவர் தற்போது வரை சீரமைப்பு செய்யப்படாமல் அப்படியே உள்ளது. காலை மற்றும் மாலை நேரத்தில் அதிகமாக மாணவர்கள் உள்ளேயும், வெளியேயும் சென்று வருகின்றனர்.சுவர் சேதமடைந்த பகுதியில் விடுமுறை நாட்களில் விளையாடுவது வழக்கம். எனவே, அசம்பாவிதம் ஏதும் நிகழ்வதற்குள், பள்ளி மாணவர்கள் நலன் கருதி, இந்த சுவற்றை விரைவில் சீரமைக்க வேண்டும்.
17-Aug-2024