உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு  புதிய உறுப்பினர்கள் தேர்வு தீவிரம்

பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு  புதிய உறுப்பினர்கள் தேர்வு தீவிரம்

ஆனைமலை ஒன்றியத்தில், வேட்டைக்காரன்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட 14 பள்ளிகளில், மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டது.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசுப்பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்.எம்.சி.,) 2022-ம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டது.அதன்படி பெற்றோர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கல்வியாளர்களை உள்ளடக்கிய, 20 உறுப்பினர்கள் கொண்ட குழுவாக எஸ்.எம்.சி., மாற்றி அமைக்கப்பட்டது. இந்த பள்ளி மேலாண்மைக்குழுவின் பதவிக்காலம், கடந்த மாதம் நிறைவு பெற்றது.இதையடுத்து, 2024--26-ம் ஆண்டுகளுக்கான எஸ்.எம்.சி., குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணி, பள்ளிகள்தோறும் தீவிரம் அடைந்துள்ளது.இந்நிலையில், ஆனைமலை ஒன்றியத்தில், வேட்டைக்காரன்புதுார் அரசு மேல்நிலைப் பள்ளி உட்பட 14 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:பள்ளி மேலாண்மைக்குழுவின் புதிய உறுப்பினர்களை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தேர்ந்தெடுக்க வேண்டும். அவ்வகையில், பள்ளிகள்தோறும், மேலாண்மை குழு மறு செய்யப்பட்டு வருகிறது.அவ்வகையில் ஆனைமலை ஒன்றியத்தில், தொடக்கப் பள்ளிகள் அனைத்திலும், மேலாண்மை குழு மறு கட்டமைப்பு செய்யப்பட்டு, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தற்போது, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்திலும் மேலாண்மை குழுவின் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து, அவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம் நடத்தி, மேலாண்மை குழுவின் அதிகாரம் மற்றும் செயல்பாடு குறித்து விளக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உடுமலை

பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைப்பு கூட்டம் நடந்தது.பள்ளி மேலாண்மைக் குழு மறுசீரமைப்பு கூட்டத்தில், தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சரவணன் வரவேற்றார். பள்ளி மேலாண்மைக்குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.குழு தலைவராக ேஹமலதா, துணைத்தலைவராக ரமணி தேர்ந்தெடுக்கப்பட்டனர். குழு மற்ற உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.பள்ளி வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து குழுவினர் கலந்துரையாடினர். கணித ஆசிரியர் ரமேஷ் நன்றி தெரிவித்தார். புதிய மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வால்பாறை

வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமையில் நடந்தது. பள்ளி ஆசிரியை கலைவாணி வரவேற்றார்.கூட்டத்தில், பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக அனிதா, துணைத்தலைவராக வெள்ளத்தாய் மற்றும் உறுப்பினர்களாக 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி கட்டமைப்பு வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வித்தரம் மேற்படுத்தும் வகையிலும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்றனர்.* வால்பாறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு தலைமை ஆசிரியை ஜெயலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவராக ஜோதிப்பிரியா மற்றும் 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.* சோலையாறுடேம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்துக்கு தலைமை ஆசிரியர் தமிழ்செல்வன் தலைமை வகித்தார். மேலாண்மைக்குழு தலைவராக பூமாரி, துணை தலைவராக கஸ்துாரி, உறுப்பினர்களாக 20 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.* அட்டகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமையில் நடந்த கூட்டத்தில், மேலாண்மைக்குழு தலைவராக சாந்தி, துணைத்தலைவராக ராஜேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பள்ளி வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்வது, இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கபட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை