உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஓய்வு பெற்றோர் அமைப்பு; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

ஓய்வு பெற்றோர் அமைப்பு; கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை;கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.மின்வாரிய ஓய்வூதியர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு 2024 ஜன., 1 முதல், 2024 மே 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 4 சதவீத அகவிலைப்படி நிலுவை தொகை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தின் படி, காப்பீட்டு நிறுவனத்திடம் மருத்துவ செலவினங்களை முழுமையாக பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.கோவை மண்டலம் சார்பில், கோவை மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலக நுழைவு வாயில் முன், காலை 10:00 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டத்துக்கு, கோவை கிளை தலைவர் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார்.செயலாளர் விவேகானந்தன், கோவை மண்டல செயலாளர் சுந்தரேசன், இணை செயலாளர் மீனாட்சி சுந்தரம், உட்பட பலர் பங்கேற்று பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ