உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிளேடால் கிழித்தார்... தீ வைத்து கொளுத்தினார் ஸ்கூட்டர் உரிமையாளர் புகார்; தொழிலாளி கைது

பிளேடால் கிழித்தார்... தீ வைத்து கொளுத்தினார் ஸ்கூட்டர் உரிமையாளர் புகார்; தொழிலாளி கைது

கோவை:ஸ்கூட்டருக்கு தீ வைத்த கட்டட தொழிலாளியை, போலீசார் கைது செய்தனர்.கோவை ரத்தினபுரி லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் அம்புரோஸ், 58; இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கண்ணன், 46; கட்டட தொழிலாளி. 2023ம் ஆண்டு, கண்ணன் குடிபோதையில் அம்புரோசுடன் தகராறில் ஈடுபட்டார். அம்புரோஸ் ஸ்கூட்டரின் சீட்டை, பிளேடால் கிழித்து சேதப்படுத்தினார். அம்புரோஸ் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார்.போலீசார் கண்ணனை கண்டித்து, ஸ்கூட்டரின் சீட்டை மாற்றிக் கொடுக்கும் படி கூறினர். கண்ணன் அவ்வாறே செய்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு, 1:30 மணியளவில் ஊர்காவல் படை வீரர் சுனில், ரத்தினபுரி பகுதியில் ரோந்து சொன்றார். அப்போது அம்புரோஸ் வீட்டின் முன் நிறுத்தி இருந்த அவரது ஸ்கூட்டர், தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்ததை பார்த்தார்.உடனே சத்தம் போட்டு அம்புரோசை அழைத்தார். அம்புரோஸ் வருவதற்கு முன், கண்ணன் தண்ணீருடன் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தார். அம்புரோசும் வெளியே வந்து தீயை அணைத்தார். இதை தொடர்ந்து அம்புரோஸ் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அப்போது ஊர்காவல் படை வீரர் சுனில், தான் ஸ்கூட்டர் எரிவதை பார்த்த போது, கண்ணன் வீடு திறந்து இருந்ததாக தெரிவித்தார். போலீசாருக்கு கண்ணன் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், ஸ்கூட்டருக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டார். கண்ணனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை