உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பணி நியமன ஆணை வழங்கும் ரித்தி 2024

பணி நியமன ஆணை வழங்கும் ரித்தி 2024

போத்தனூர்;நேரு கல்வி குழுமத்தில் பயின்ற மாணவர்களுக்கான, பணி நியமன ஆணை வழங்கும் 'ரித்தி 2024' விழா நடந்தது.திருமலையம்பாளையத்திலுள்ள கல்லூரி அரங்கில் நடந்த விழாவில், விர்ட்டுசா நிறுவன மனித வள மேம்பாட்டு துறை துணை தலைவர் சந்திரசேகர் சென்னியப்பன், காக்னிசன்ட் நிறுவன இயக்குனர் சக்திவேல் ராஜசேகர் ஆகியோர், பணி நியமன ஆணைகளை வழங்கினர்.நாடு முழுவதுமிருந்து சுமார், 180 நிறுவனங்களுக்கு தேர்வான, 2,300 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. முன்னதாக, பிளேஸ்மென்ட் பிரிவு இயக்குனர் ரமேஷ் ராஜா வரவேற்றார். பயிற்சி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனர் அருண்குமார், ஆண்டறிக்கை வாசித்தார்.நேரு கல்வி குழுமத்தின், கல்வி மற்றும் நிர்வாக செயல் இயக்குனர் நாகராஜா வாழ்த்தினார். சிவமணி நன்றி கூறினார். மாணவர்கள், கல்விக்குழும கல்லூரி முதல்வர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ