உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி சாலை மறியல்

ரயில்வே கேட்டில் மேம்பாலம் கட்ட வலியுறுத்தி சாலை மறியல்

கோவை : கோவை ஒண்டிப்புதுார் சூரியாநகர் ரயில்வே கேட் எண் 3 -ல் மேம்பாலம் கட்டக்கோரி சிவலிங்கபுரம், காமாட்சிநகர், சக்திநகர் குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்த பொதுமக்கள், ஒண்டிப்புதுார் பாலம் அருகில் நேற்று ரோடு மறியலில் ஈடுபட்டனர்.இது குறித்து, குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:ஒண்டிப்புதுார் சூரியாநகர் ரயில்வே கேட் எண் 3ல் ரயில்வே மேம்பாலம் அமைக்க, 2011 ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு, 26.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அங்கு பாலம் கட்டும் பணி நடக்கவில்லை. ஆனால் அந்த திட்டம் கைவிடப்பட்டு, அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது.இங்கு பாலம் கட்டப்படாததால், இந்த பகுதி மக்கள் போக்குவரத்து வசதி இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இந்த கேட் உள்ள பகுதியில், ரயில்வே துறையினர் தடுப்பு சுவர் கட்டிவிட்டால் நான்கு கி.மீ., தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும். அதனால் இங்கு மேம்பாலம் கட்டும் பணியை விரைவில் துவங்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ