உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திடலில் நெரிசலை தவிர்க்க ரவுண்டானா ரோடு அகலப்படுத்தும் பணி தீவிரம்

திடலில் நெரிசலை தவிர்க்க ரவுண்டானா ரோடு அகலப்படுத்தும் பணி தீவிரம்

பொள்ளாச்சி : 'பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில், ரோடு அகலப்படுத்தும் பணி ஒரு வாரத்தில் முடிக்கப்படும்,' என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி திருவள்ளுவர் திடல், மார்க்கெட் ரோடு வழியாக தினமும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், கேரளா மற்றும் ஆனைமலை சுற்றுப்பகுதிக்கு செல்கின்றன. மார்க்கெட் ரோடு பகுதிகளில் அதிகளவு வணிக வளாகங்கள், குடோன்கள் உள்ளதால், சரக்கு ஏற்றி வரும் லாரிகளும் அதிகமாக வந்து செல்கின்றன.இந்நிலையில், இப்பகுதியில் கனரக வாகனங்கள் ரோட்டிலே நிறுத்தப்பட்டு, சரக்குகள் இறக்கப்படுகின்றன. இதனால், மற்ற வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.மீன்கரை ரோடு, மார்க்கெட் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், திருவள்ளுவர் திடலில், 'ரவுண்டானா' அமைக்கவும், அங்குள்ள சரக்கு வாகனங்கள் நிறுத்த மாற்று இடம் ஒதுக்கீடு செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.இந்நிலையில், திருவள்ளுவர் திடலில், ரவுண்டானா அமைப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அரசுக்கு கருத்துரு அனுப்பினர். அதன் படி, சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி கோட்டத்தில், திருவள்ளுவர் திடலில், சந்திப்பு மேம்பாடு, ரவுண்டானா அமைத்தல் பணிக்காக, மூன்று கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, பணி நடக்கின்றன.அதில், திருவள்ளுவர் திடல் அருகே ரவுண்டானா அமைக்கப்படுகிறது. மார்க்கெட் ரோட்டில், 'யூ டேர்ன்' அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ரோடு விரிவாக்கத்துக்காக இடையூறாக இருந்த மின்கம்பங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருவள்ளுவர் திடல் சந்திப்பு மற்றும் மார்க்கெட் ரோடு சந்திப்புகள், மூன்று கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகின்றது.இந்த சாலை சந்திப்பு மேம்பாட்டு பணிக்கு இடையூறாக இருந்த மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டதையடுத்து, அகலப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்துக்குள் அகலப்படுத்தும் பணிகள் நிறைவடையும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை