உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டு வழிப்பறி வழக்குகளில் ரவுடிக்கு தலா 7 ஆண்டு சிறை

இரண்டு வழிப்பறி வழக்குகளில் ரவுடிக்கு தலா 7 ஆண்டு சிறை

கோவை;இரண்டு வழிப்பறி வழக்குகளில், ரவுடிக்கு தலா ஏழாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.கோவை, ரத்னபுரி, சாஸ்திரி நகரை சேர்ந்தவர் இளமுருகன் என்ற கபாலி,43. இவர் மீது வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. காந்திபுரம், டவுன் பஸ் ஸ்டாண்டில், ஆவின் டீக்கடை நடத்தி வந்த சத்யராஜ் என்பரிடம், 2021, ஆக., 4ல் கத்தியை காட்டி மிரட்டி, 1,500 ரூபாய் பறித்தார். அதே நாளில், காந்திபுரத்தில் தள்ளுவண்டியில் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்து வந்த, சுரேஷ் என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்தார்.இருவர் கொடுத்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் விசாரித்து, இளமுருகனை கைது செய்தனர். கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதின்றத்தில், தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.விசாரித்த நீதிபதி கவுதமன், இளமுருகனுக்கு ஒவ்வொரு வழக்கிலும், தலா ஏழாண்டு சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் கூடுதல் சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி வாதிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ