உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை பிரீமியர் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ், வாரியர்ஸ் அபாரம்

கோவை பிரீமியர் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ், வாரியர்ஸ் அபாரம்

கோவை;மாவட்ட அளவிலான கோவை பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கோவை வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் கோயம்புத்துார் அணிகள், அபாரமாக விளையாடி வெற்றி பெற்றன.கோவை மாவட்டத்தில் உள்ள 16 வயதுக்கு மேற்பட்ட வீரர்களுக்கு, மீடியா ஒன், தவுசண்ட் பிரிக்ஸ் இணைந்து, 'கோவை பிரீமியர் லீக்' என்ற கிரிக்கெட் போட்டியை, சரவணம்பட்டியில் உள்ள 22 யார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடத்துகின்றனர்.நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்ஸ் 11 அணியை வீழ்த்தியது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் யோகேஷ்வரன், நான்கு விக்கெட் வீழ்த்தினார்.மற்றொரு போட்டியில், கோவை வாரியர்ஸ் அணி 80 ரன்கள் வித்தியாசத்தில், கோயம்புத்துார் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது.சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் தரணி, மூன்று விக்கெட் மற்றும் வாரியர்ஸ் அணியின் மகேஷ் அன்பழகன் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை