உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆறு பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம்! பங்கேற்று திணறிய போட்டியாளர்கள்

ஆறு பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம்! பங்கேற்று திணறிய போட்டியாளர்கள்

கோவை : கோவை லங்கா கார்னர் பகுதியில், 'போசே புட் எக்ஸ்பிரஸ்' எனும் ரயில் பெட்டி உணவகம் செயல்பட்டு வருகிறது. இவ்வுணவகம் சார்பில், ஆறு பிரியாணிகள் உட்கொண்டால், ரூ.1 லட்சம், ஐந்து பிரியாணி உட்கொண்டால், ரூ.50 ஆயிரம், மூன்று பிரியாணி உட்கொண்டால், ரூ.25 ஆயிரம் என, அறிவிக்கப்பட்டது. போட்டி நேற்று மதியம், 1:00 முதல் மாலை, 4:00 மணி வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து காலை முதலே ஏராளமானோர் திரண்டனர். பதிவு செய்தவர்களுக்கு, மதியம், 12:30 மணிக்கு மேல் விண்ணப்பம் வழங்கப்பட்டது. விண்ணப்பத்தில், பல்வேறு விபரங்கள், உடல் ஆரோக்கியம் குறித்து கேட்கப்பட்டிருந்தது.போட்டியில் பங்கேற்க, 400 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்தனர். மாலை, 5:35 மணி வரை, 125 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களுக்கு, 550 கிராம் பிரியாணி வழங்கப்பட்டது. போட்டியாளர்கள் பிரியாணியை உட்கொள்ள திணறினர். போட்டியில் பங்கேற்ற பெண்கள் சிலர், கண்கள் கலங்கியபடி பிரியாணியை உட்கொண்டனர். இரவிலும் போட்டி தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Jay
ஆக 29, 2024 22:58

ஏற்கனவே யூடியூப் சேனல்கள் பார்த்து மக்கள் தின்பதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. நள்ளிரவு பிரியாணி அதிகாலை பிரியாணி என ஏற்கனவே மக்கள் தங்கள் உடம்புகளை கெடுத்துக் கொண்டுள்ளார்கள். இதில் அடுத்த கட்டம் தான் பிரியாணி திங்கும் போட்டி... இந்தியாவிலேயே டயாபட்டிக் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான அரிசியை தின்பது தான்.


sankaran
ஆக 29, 2024 15:21

வெட்கம் கெட்ட செயல்.....


Mani . V
ஆக 29, 2024 05:17

இது போன்ற கேடுகெட்ட பந்தயங்களுக்கு தடை விதிக்கணும். யாராவது மூச்சுத் திணறி இறந்தால் யார் பொறுப்பு ஏற்பது? இதற்கு எப்படி அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்கள்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை