அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.12 லட்சம் மோசடி
மேட்டுப்பாளையம்; மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக, ரூ.12 லட்சம் ஏமாற்றியதாக, குவைத்தில் உள்ள காரமடையை சேர்ந்த செவிலியர் அளித்த புகார் தொடர்பாக, காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.காரமடையை சேர்ந்தவர் அனிதா. இவர் தற்போது குவைத் நாட்டில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பத்திற்கு ஒருவர் அறிமுகமானார். மத்திய அரசு வேலை வாங்கித் தர முடியும் எனக் கூறியுள்ளார். இதையடுத்து, ரூ.12 லட்சத்தை அவரிடம் கொடுத்துள்ளனர்.பல மாதங்கள் ஆகியும் அரசு வேலை வாங்கி தராததால், அனிதா பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து, குவைத்தில் இருந்தவாறே, இந்தியாவில் உள்ள என்.ஆர்.ஐ., செல்லுக்கு அனிதா புகார் மனு அனுப்பினார். தற்போது இதுதொடர்பாக காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.--