உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல் பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்

கல் பந்தல் அமைக்க ரூ.3 லட்சம் மானியம்

கிணத்துக்கடவு:தோட்டகலை துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், புதிதாக கல் கால் பந்தல் அமைக்க, 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.கிணத்துக்கடவு வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், தோட்டகலை துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம், 2024 - 25 வாயிலாக, புதிதாக கல் கால் பந்தல் அமைக்க, ஒரு ஹெக்டேருக்கு, 3 லட்சம் ரூபாய் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.இதற்கு, மூன்று ஹெக்டேர் அளவு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், 20 சதவீதம் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கும், 80 சதவீதம் மற்ற விவசாயிகளுக்கும் வழங்கப்படுகிறது.தக்காளி பயிரிட குச்சி கட்டுதலுக்கு, 2.5 ஏக்கருக்கு, 25 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது, கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், 2024 - 25ல் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களுக்கு, 80 சதவீதமும், மற்ற கிராமங்களுக்கு, 20 சதவீதமும் முன்னுரிமை அளிக்கப்படும். இத்தகவலை தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை