உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் போராட்டம்

ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் போராட்டம்

கோவை:தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், நிருபர்கள் சந்திப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் பிரபு கூறியதாவது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம், குறைந்த பட்சக்கூலி சட்டத்தின் படி, ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்களுக்கு, ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து போராடி வருகிறது. இதை முன்னிட்டு நாளை(இன்று) காலை 10:00 மணிக்கு மாநிலம் தழுவிய காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது.கோவையில் சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் அருகில் நடைபெற உள்ள இந்தப் போராட்டத்தில், மாவட்டம் முழுவதும் இருந்து ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் பெருமளவில் பங்கேற்க உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்